Sunday, June 22, 2008
என்னை கவர்ந்த கவிதைகள் 5
உன் சுபச்செய்தி ஒன்றை
எடுத்துவிட
என் துக்க நேரத்தை
துலாவுகிறாய்.
என் துக்கத்தை
பகிர்ந்து கொண்டால்
தலைப்பை மாற்றச்சொல்கிறாய்
ஐந்து நிமிடம் காத்துவிட்டு
ஐம்பது நிமிடம்
காத்திருந்ததாய் சொல்கிறாய்
இதே தவறு
உன் புறத்தில் இருந்தால்
காத்திருந்ததில்
குடியா முழுகிப்போச்சு என்கிறாய்.
உன் வரலாற்றை மட்டுமின்றி
ரேகா மாலா சந்தியா
அனைவரின் வரலாறையும் கூறி
“ம” கொட்டச்சொல்கிறாய்
பூக்காரியிடம் கூட
அடிமாட்டு விலைக்கு
பேரம் பேசும் நீ
நான் புழங்குவதில்
விலைகுறைந்த
பொருளை கண்டுவிட்டால்
மகா கஞ்சனென்கிறாய்
நடுநிசி வரை
யார் யாருக்கோ
குறுந்தகவல் அனுப்பும் நீ
பேருந்து நெரிசலில்
என்னை பார்த்துவிட்டால்
சந்தேகம் கொள்கிறாய்
எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிக்காத பட்சத்தில்
என்ன ரசனையோ என்று
கேலி செய்கிறாய்
உனக்கு பிடித்தவைகள்
எனக்கு பிடிக்காத பட்சத்தில்
கழுதைக்கு தெரியுமா
கற்பூர வாசனை என்கிறாய்
காதலுக்கு கண்கள் மட்டுமல்ல
மனதும் இருக்ககூடாதென்கிறாய்
எனக்கு தெரிந்தவரை
உன் நிபந்தனைகள் படி
உன்னை காதலிக்க
என் வீட்டு
அல்சேஷியனை தவிர
ஒரு ஜீவன் இருப்பதாய்
எனக்கு தெரியவில்லை.
நன்றி
எஸ்.எம்.சுனைத் ஹஸனி. (தமிழ்மன்றம் .com)
Wednesday, June 11, 2008
என்னை கவர்ந்த கவிதைகள் 4
________________________________________
உன்னை பார்த்த பிறகுதான்
என்னுள் எத்தனை
மாற்றங்கள்
அனைத்தும் பிடித்துவிட்டது
உன்னையும் சேர்த்து….
என்னை நானே ரசிக்கிறேன்
உன் சிரிப்பை என்னை
என்னுள் குதூலிக்கிறேன்
உன் பார்வை பார்த்து
நீ கடித்த அப்பளம்
போலதான் நானும்
நொறுங்கி போகிறேன்
உன்னை ஒரு நாள்
கானாவிடில் சோகத்தின்
சிம்மாசனத்தில் அமர்கிறேன்
என்னாச்சு எனக்கு
எல்லோரும் கேட்க
எனக்கே தெரியவில்லை
என்னாச்சு எனக்கென்று
கண்மூடி யோசித்து
பார்த்தால்
நீ மட்டுமே
தெரிகிறாய்.....ஆ
இது கூட நல்லாயிருக்கே
இனி
எப்பொழுதும் யோசிப்புதான்...
நன்றி நம்பிகோபாலன்(தமிழ் மன்றம் .com)
Wednesday, June 4, 2008
என்னை கவர்ந்த கவிதைகள் 3
உறைந்த நிமிடம்..!
வெயில் பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது
கடலின் அருகில்..!
தூரத்து வானின்
கருத்த சீலையால்
மறைக்காத இடங்கள்
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!
எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!
சிறுத்தையின் வேகத்தில்
சீறி வந்தாய் என் முன்..!
சிருங்கார பார்வையில்லை..!
சிரிப்பூட்டும் இதழில்லை..!
புரியாமல் பார்க்கின்றேன்..!
புரிந்தே நீ காண மறுக்கும்
என் விழியோர நேர்பார்வை..!
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!
"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி
விலகி நின்றாய்..!
இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!
மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!
என் உயிர் பிய்த்து
உடல் மட்டும் சவமாய்
உறைய வைத்து
விட்டுச் சென்றாய்..!
சிதறிய கண்ணீர் மழைநீரோடு
மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு
விவரம் சொன்னேன்..!
வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்
இதயத்து வலியோடு..!
சாலைகள் புதிதாய்..!
மழை மட்டும் என்னோடு
மருளாமல் துணையாய்..!
யாருமில்லை.. எவருமில்லை..!
இருட்டத் துவங்கும் தூரம் வரை
இரு காலும் இலக்கின்றி
நடந்து சோர்ந்தது..!
ஏதோ ஒரு கடை..!
உள்ளும் புறமும்
ஈரத்தோடு நுழைகிறேன்..!
உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!
மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!
வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூறலாக்கி
மனம் லேசாக்கியது..!
தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!
நன்றி பூமகள் (தமிழ் மன்றம் .com)
என்னை கவர்ந்த கவிதைகள் 2
--------------------------------------------------------------------------------
இன்றும் தொடங்கிற்றுஉன் ஞாபக தொல்லைகள்
அச்சோதனை சாவடியில்எல்லோரும் பொதிகளோடு இறங்க,
எப்போதும் போல்,
நான் மட்டும் உன் ஞாபக சுமையோடு இறங்குவேன்.
காலம் விழுங்கிய உன்னைஎன்றும் ஞாபகப்படுத்தும்- அவள்,
காக்கி உடையோடு...நீதான் நீயேதான் என மனம் கூவும்;
அடம்பிடிக்கும்ஆனாலும்,
காலம் உன்னை தொலைக்க காரணமும்,
அவள் அணிந்துள்ள காக்கிதான்உண்மை சுட எப்போதும் போல் அடையாள அட்டையுடன் முடித்து கொள்வேன்.
உன்னையும் உன் ஞாபகங்களையும்.
நன்றி அகத்தியன் (தமிழ் மன்றம் .com)
என்னை கவர்ந்த கவிதைகள்
உன் கனவுகளை
தேடுகிறேன்எதில் ஒளித்தாய்?
நான் உண்ணும் உன் புன்னகையிலா?
இல்லை....உன் பார்வை என்னும் சவுக்க்குகளிலா?
எதில் ஒளித்தாய்?
கடைசிப்பக்கம் தொலைந்த மர்ம நாவலாகிப்போனாய்-நீ எனக்கு.
எதில் மலர்வாய்?
எதில் உலர்வாய்?
எப்போதும் போல் குழப்பந்தான்.
ஆனாலும்,
உன்னில் என்றும் வசிக்கிறேன்.
உன் கனாக்களை தேடுவதில் என் காலத்தை கழிக்கிறேன்.
நீ மட்டும்அப்படியே இருஎன் வாழ்வின் சுவாரசியங்கள்உன்னில்தான் நிரம்பி வழிகின்றன
நன்றி அகத்தியன் (தமிழ் மன்றம் .com)