21ம் நூற்றாண்டு காதலிகள்
உன் சுபச்செய்தி ஒன்றை
எடுத்துவிட
என் துக்க நேரத்தை
துலாவுகிறாய்.
என் துக்கத்தை
பகிர்ந்து கொண்டால்
தலைப்பை மாற்றச்சொல்கிறாய்
ஐந்து நிமிடம் காத்துவிட்டு
ஐம்பது நிமிடம்
காத்திருந்ததாய் சொல்கிறாய்
இதே தவறு
உன் புறத்தில் இருந்தால்
காத்திருந்ததில்
குடியா முழுகிப்போச்சு என்கிறாய்.
உன் வரலாற்றை மட்டுமின்றி
ரேகா மாலா சந்தியா
அனைவரின் வரலாறையும் கூறி
“ம” கொட்டச்சொல்கிறாய்
பூக்காரியிடம் கூட
அடிமாட்டு விலைக்கு
பேரம் பேசும் நீ
நான் புழங்குவதில்
விலைகுறைந்த
பொருளை கண்டுவிட்டால்
மகா கஞ்சனென்கிறாய்
நடுநிசி வரை
யார் யாருக்கோ
குறுந்தகவல் அனுப்பும் நீ
பேருந்து நெரிசலில்
என்னை பார்த்துவிட்டால்
சந்தேகம் கொள்கிறாய்
எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிக்காத பட்சத்தில்
என்ன ரசனையோ என்று
கேலி செய்கிறாய்
உனக்கு பிடித்தவைகள்
எனக்கு பிடிக்காத பட்சத்தில்
கழுதைக்கு தெரியுமா
கற்பூர வாசனை என்கிறாய்
காதலுக்கு கண்கள் மட்டுமல்ல
மனதும் இருக்ககூடாதென்கிறாய்
எனக்கு தெரிந்தவரை
உன் நிபந்தனைகள் படி
உன்னை காதலிக்க
என் வீட்டு
அல்சேஷியனை தவிர
ஒரு ஜீவன் இருப்பதாய்
எனக்கு தெரியவில்லை.
நன்றி
எஸ்.எம்.சுனைத் ஹஸனி. (தமிழ்மன்றம் .com)
Sunday, June 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கவித நல்லா எழுதியிருக்காகளே.. அது சரி சொந்தமா கவிதய எழுதக்கூடாதா தலீவா...
சொந்தமா எழுதின நீங்க எல்லாம் ரொம்பவே கவலைபடுவீங்க
அதனால்தான் இப்போதக்கி மத்தவங்க கவிதா
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment